முதலாவது பெண்கள் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 3 முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அணிகளை வாங்க விரும்பும் நிறுவனங்கள் உரிமை கோரலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் டெண்டர் அழைப்பை விடுத்து இருந்தது. டெண்டர் விண்ணப்பத்தை ரூ.5 லட்சம் செலுத்தி வருகிற 21ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் 5 ஐ.பி.எல். அணிகளின் நிர்வாகம் பெண்கள் அணிகளையும் வாங்க ஆர்வத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பெண்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்கும் விருப்பத்துடன் உள்ளன.
maalaimalar