சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு இடமாற்றம்

115

கடமை தேவைகள் காரணமாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.வி.டி.ஏ.ஜே.கரவிட்ட, பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.பி.டி ஜயசிங்க மற்றும் பி. லியனகே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், 5 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், ஒரு பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் இரண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். – ada derana

SHARE