காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு!

301

 கடந்த மாதம் கிளிநொச்சியில் காணாமல் போனதாக கூறப்பட்ட குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

yarshika

ஜூன் 21ஆம் திகதி முதல் கிளிநொச்சியில் மூன்று வயது குழந்தை ஒன்று காணவில்லை என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

இந்நிலையில் கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு என்ற பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் இருந்து இந்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸைார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் தற்பொழுது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உதயகுமார் யர்சிகா என்ற இந்தக் குழந்தை தமது தாயாருடன் சக்திபுரம் என்ற இடத்தில் நீராட சென்றவேளையில் காணாமல் போனதாக குறைப்பாது தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE