இலங்கை உட்பட்ட பல நாடுகளில் வறுமை நிலை அதிகரிப்பு – உலக வங்கி

130

இலங்கை உட்பட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த நாடுகளில் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள ‘Global Economic Prospects 2023’ என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வறுமையால் பல குடும்பங்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுக்கான தமது செலவினங்களைக் குறைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2022 இல் இலங்கையின் உற்பத்தி 9.2மூ குறைவடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, இலங்கைக்கான அந்நிய செலாவணி வரத்து குறைவடைந்துள்ளதால், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் இறக்குமதி தடைபட்டுள்ளதுடன், வெளிநாட்டுக் கடனை செலுத்துவதும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE