சுதந்திர மக்கள் கூட்டணி உதயம்

115
பல அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய சுதந்திர மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திர மக்கள் சபை, உத்தர லங்கா கூட்டணி உள்ளிட்ட 10 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் இணைந்து சுதந்திர மக்கள் கூட்டணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கவுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 35 பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

SHARE