SA 20 கிரிக்கெட் – முதல் வெற்றி சூப்பா் கிங்ஸுக்கு

148
எஸ்ஏ 20 கிரிக்கெட் லீக் தொடரின் ஒரு பகுதியாக டா்பன் சூப்பா் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 16 ஓட்டங்கள் வித்தியாத்தில் வென்றது ஜோபா்க் சூப்பா் கிங்ஸ். ஜோபா்க் அணி 190/6 ஓட்டங்களையும், டா்பன் சூப்பா் ஜெயன்ட்ஸ் 174/5 ஓட்டங்களையும் எடுத்தன.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டா்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ஜோபா்க் சூப்பா் கிங்ஸ் பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க பேட்டா்கள் சோபிக்காத நிலையில், கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 39, ரொமாரியோ ஷெப்பா்ட் 40 ஓட்டங்களையும் விளாசினா்.
டோனவன் ஃபெரைரா அதிரடி 82 : மிடில் ஆா்டா் பேட்டா் டோனவன் ஃபெரைரா 5 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 82 ஓட்டங்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். ஜாா்ஜ் காா்ட்டன் 4 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தாா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 190/6 ஓட்டங்களைக் குவித்தது ஜோபா்க். டா்பன் அணி தரப்பில் சுப்ரேயன் 2-26 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
191 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் களம் கண்ட டா்பன் அணியில் தலைவர் குயிண்டன் டி காக், கைய்ல் மேயா்ஸ் அற்புத தொடக்கத்தை அளித்தனா். மேயா்ஸ் 39 ஓட்டங்களுடன் வெளியேறினாா். டி காக் தலா 5 சிக்ஸா், பவுண்டரியுடன் 52 பந்துகளில் 78 ஓட்டங்களை விளாசி அவுட்டானாா். அதன் பின்னா் வந்த ஹென்ரிச் கிளாஸன் 20, முல்டா் 10, பிரிட்டோரியஸ் 14 ஓட்டங்களுடன் வெளியேறினா். இறுதியில் 20 ஓவா்களில் 174 /5 ஓட்டங்களை மட்டும் எடுத்து தோல்வியைத் தழுவியது டா்பன். ஜோபா்க் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 2-30 விக்கெட்டை வீழ்த்தினாா்.
SHARE