நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தால் எலும்புக்கூடுகள் மாத்திரமே மிஞ்சும்: மஹிந்த

681
நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால், நாட்டில் எலும்பு கூடுகளில் குவியல் மாத்திரமே எஞ்சும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
mahinda11

பத்தரமுல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது ஆட்சியை பறித்துக்கொண்ட கடந்த 07 மாதத்தினுள் நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களால் வாழ முடியாத நிலைமை ஒன்று உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE