கொடுப்பனவுகள் குறித்து அரச ஊழியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

123
அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சேமநல கொடுப்பனவுகள் தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவை இல்லை. அந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச வருமானம் மற்றும் செலவுகளை நிர்வகிப்பதில் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்று நிதியமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சில செயற்திட்டங்களுக்காக செலுத்த வேண்டியுள்ள கொடுப்பனவை செலுத்துவதற்கான முறையான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

SHARE