இளைய தளபதி விஜய்யுடன் நடிகைகள் ஜோடியாக நடிக்க தான் போட்டி போடுவார்கள், ஆனால், இங்கு ஒரு நடிகை அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால், அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை, ஏனெனில் அவரால் இனி ஹீரோயினாக தான் நடிக்க முடியாது தான். அவர் வேறு யாரும் இல்லை மிருகம், குரு என் ஆளு போன்ற படங்களில் நடித்த சோனா தான்.
இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நடத்திய விழா ஒன்றில் பேசுகையில் ‘இளைய தளபதி விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்’ என கூறியுள்ளார்.