இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் இலங்கைக்கான விஜயம் நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு ஆதரவளிப்பதே இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் பிரதான நோக்கம் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, எரிசக்தி, பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, தற்போதைய மாற்று விகித கடன் வசதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றில் இரு தரப்பினரும் கவனம் செலுத்துவார்கள் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது. – ada derana