
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ரி20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த ஐவரடங்கிய குழுவின் அறிக்கை இன்று (16) சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியில் “Born Again” எனும் மதக் குழுவின் செல்வாக்கு தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகள் தொடர்பான தகவல்களும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரின் ஆலோசனையின் பேரில் அமைச்சின் செயலாளர் சட்டமா அதிபரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
சட்டமா அதிபரிடமிருந்து பெறப்படும் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள விளையாட்டுத்துறை அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளது. – ada derana