சாய்னா நேவால் வெற்றி – பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

159

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 22-ம் தேதி வரை நடக்கிறது. நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்து நாட்டை சேர்ந்த சுபநிடா கேட்டோங் ஆகியயோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் 14-21, 20-22 என்ற கணக்கில் சுபநிடா கேட்டோங் வெற்றி பெற்றார். இதனால் பி.வி.சிந்து இந்திய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்பில்ட்டை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-17, 12-21, 21-19 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

maalaimalar

SHARE