தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக மத பெரியார்களிடம் ஆசிர்வாதம் பெற்றது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

377

 

தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக

மத பெரியார்களிடம் ஆசிர்வாதம் பெற்றது அகில இலங்கை

தமிழ் காங்கிரஸ்

unnamed (18) unnamed (19) unnamed (20)

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ள அகில இலங்கை

தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது தேர்தல் பிரசாரத்தினை ஆரம்பிப்பதற்கு முன்பதாக மத

பெரியார்களிடம் ஆசீர்வாதத்தினை பெற்றனர்.

இன்று காலை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் (தமிழ்த் தேசிய மக்கள்

முன்னணி) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல்

மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,

விஸ்வலிங்கம் மணிவண்ணன்(சட்டத்தரணி) திருமதி பத்மினி சிதம்பரநாதன், யாழ் பல்கலைக்கழக

முன்னாள் ஆசிரியர் சங்க தலைவரும் விரிவுரையாளருமான அமிர்தலிங்கம் இராசகுமாரன்,

குருநகர் பாடுமீன் விளையாட்டுக்கழக செயலாளர் தேவதாசன் சுதர்சன், இராமநாதன் மகளீர்

கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் திருமதி ஆனந்தி, யாழ் பல்கலைக்கழக ஊழியர்

வீரசிங்கம், மனித உரிமை செயற்பாட்டாளர் செல்வி சின்னமணி கோகிலவாணி, இந்துக்

கல்லூரியின் ஆசிரியர் சங்க முன்னாள் செயலாளர் திருநாவுக்கரசு சிவகுமாரனஆகியோர்

இன்று காலை யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையிடமும், நல்லை ஆதீன

குருமகா சன்நிதானம் அவர்களிடமும், சமூக சேவையாளரும் இந்து மத பெரியாருமான

ஆறுதிருமுருகன் அவர்களிடமும் ஆசீர்வாதத்தினை பெற்றுக் கொண்டனர்.

SHARE