CSK அணியில் களமிறங்கும் தசுன் ஷானக

164
ஐபிஎல் 2023 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை தலைவர் தசுன் ஷானக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் இடம்பெற்றிருந்தார்.
ஆனால், காயம் காரணமாக அவர் சில மாதங்கள் விளையாட முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக நான்கு வீரர்கள் ஜேமிசனுக்கு மாற்று வீரராக களமிறங்க பரிசீலணையில் உள்ளனர்.

அவர்களில் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானகவும் ஒருவர்.

இதேவேளை வெய்ன் பர்னெல் (தென் ஆப்பிரிக்கா), லன்ஸ் மோரிஸ் (அவுஸ்திரேலியா), ஜெரால்டு கோட்ஸி (தென் ஆப்பிரிக்கா) ஆகியோரும் இதில் உள்ளனர்.
மேலும் ஐபிஎல் எனும் இந்திய பிரீமியர் தொடரின் 16 ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
SHARE