சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்

145

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் வெலிங்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 209 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

இதனால் 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை நியூசிலாந்து விளையாடியது. வில்லியம்சனின் சதத்தால் நியூசிலாந்து 162.3 ஓவரில் 483 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 258 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 5 விக்கெட் கைப்பற்றினார். தனது 26-வது சதத்தை (92 டெஸ்ட்) பூர்த்தி செய்தார். அவர் 132 ரன் எடுத்து (282 பந்து, 12 பவுண்டரி) அவுட் ஆனார். 2-வது இன்னிங்சில் வில்லியம்சன் 32 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர்களில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார். அவர் டெஸ்டில் 7,787 ரன் எடுத்துள்ளார். இதற்கு முன்பு ரோஸ் டெய்லர் 7,683 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

maalaimalar

SHARE