முன்னனி டென்னிஸ் வீரர் ரபேல் நடால். ஸ்பெயினை சேர்ந்த அவர் சமீப காலமாக காயத்தால் அவதி அடைந்து வருகிறார்.
அவருக்கு இடுப்பு பகுதியில் தசை கிழிந்து இருப்பது தெரிய வந்தது. இதற்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரபேல் நடால் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, ” இந்தியன் வெல்ஸ் அல்லது மியாமி டென்னிசில் என்னால் போட்டியிட முடியாமல் போனதில் வருத்தமாக உள்ளது. எனது அனைத்து அமெரிக்க ரசிகர்களையும் மிஸ் பண்ணுவேன்” என்று கூறியுள்ளார்.
maalaimalar