”சில மாதங்களுக்கு முன்பு, போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய சமயம் புலிகளின் ராணுவத் துறை, புலனாய்வுத் துறை, அரசியல் துறை பொறுப்பாளர்களை அழைத்தார் பிரபாகரன்.
அப்போது ‘ராணுவத் துறை இறுதி வரை களத்தில் நின்று போரிட வேண்டும்; போரின் நிறைவில் அரசியல் துறையினர் உலக நாடுகளுக்கு நமது கொள்கைகளையும், சிங்களப்படையின் போர்க் குற்றங்களையும் விளக்க வேண்டும்; அதற்காக புலனாய்வுத் துறையினர் மட்டும் முழுவதுமாகத் தப்பிவிட வேண்டும்’ என்பதுதான் தலைவர் இட்ட கட்டளை.
அதன்படி, பொட்டு அம்மானில் தொடங்கி கதிர்காமத்தம்பி அறிவழகன், பாலசிங்கம், ராஜரத்தினம், அண்டு வேல்மன், இளங்கப்பிள்ளை, வீரசிங்கம், ரஞ்சித் பெர்ணாண்டோ, டேவிட் பூபாலபிள்ளை, லூகாஸ் பாலசிங்கம், நடராசா மதிதரன், ஜேம்ஸ் கருணாகரன், சதியன் குமரன், பாலச்சந்திரன், ஜெகன்மோகன் உள்ளிட்ட புலனாய்வுப்பிரிவின் முக்கியத் தளபதிகள் 57 பேர் உலக நாடுகள் முழுவதிலும் சென்று பதுங்கிவிட்டனர்.
அவர்கள் சமயம் பார்த்து வெளியில் வருவார்கள்” என்பதே நம்பிக்கையான விளக்கம்!
– See more at: http://www.asrilanka.com/2015/07/25/29513#sthash.DganHdmr.dpuf