தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.
டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணிகளை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைவராக இருந்த பவுமா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ஒருநாள் அணிக்கு மட்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி 20 அணிக்கு எய்டன் மார்க்ரம் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் எய்டன் மார்க்ரம் தலையிலான சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 அணிக்கு இனிமேல் மார்க்ரமே தலைவராக தெரிவு செயல்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.