மீரா ஜாஸ்மினுக்கு இனி அம்மா வேடம்தான் இயக்குனர்கள் முடிவு 

343



சண்ட கோழி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்தவர் மீரா ஜாஸ்மின். மாண்டலின் இசை கலைஞர் ராஜேஷுடன் இவருக்கு காதல் சர்ச்சை உருவானது. பிறகு துபாய் இன்ஜினியர் அனில் ஜான் என்பவரை மணந்துகொண்டார். காதல் சர்ச்சை, திருமணம் என பிரச்னைகளில் சிக்கியதால் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். திருமணத்துக்கு பிறகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க தயாரானார் மீரா. அதற்குள் புதுஹீரோயின் வரவு அதிகரித்ததுடன், இளம் ஹீரோயின்கள் முன்னணி இடத்தை ஆக்ரமித்துவிட்டனர். இதனால் மீராவின் தேவை குறைந்துவிட்டது. நடிக்க கேட்டு சென்ற இயக்குனர்களும் மலையாள சினிமாவில் அம்மா வேடமே தந்தனர். ஒன்றிரண்டு படங்களை மறுத்துப்பார்த்தும் தொடர்ந்து அதே பாணியில் கதைகள் வந்ததால் மனதை தேற்றிக்கொண்டு அம்மா வேடங்களை ஏற்க முடிவு செய்தார். ரியாஸ்கான் நடிக்கும் மலையாள ‘இதுநும்மபுரம்’ படத்தில் 3 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறார். அத்துடன் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் சண்டகோழி 2ம் பாகத்திலும் அம்மா வேடத்தில் நடிப்பார் என்று தெரிகிறது

 

SHARE