பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். அவருடன் இளம் நடிகைகள் இணைந்து மகள் வேடத்தில் நடிக்க விரும்புகின்றனர். ‘பிகு’ இந்தி படத்தில் தந்தை, மகள் கதாபாத்திரத்தில் அமிதாப், தீபிகா படுகோன் நடித்திருந்தனர். இப்படம் வெளியானபின் வெற்றி பார்ட்டிக்கு தீபிகா ஏற்பாடு செய்தார். இதில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ஆனால் படத்தில் தந்தை வேடத்தில் நடித்த அமிதாப் வரவில்லை. இதில் தீபிகா கோபம் அடைந்தார்.இந்த சம்பவத்துக்கு பிறகு நீங்கள் ஏன் தீபிகா அளித்த பார்ட்டியில் கலந்துகொள்ளவில்லை என்று அமிதாப்பிடம் கேட்டபோது, ‘எனக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை’ என பதில் அளித்தார்.சமீபத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் ஆனார். இதேபடத்தில் கவுரவ வேடத்தில் அமிதாப் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையறிந்த தீபிகா படத்திலிருந்து விலகினார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது