ராஜமவுலி இயக்கிய பாகுபலி சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. பிரபாஸ், ராணா ஹீரோ, வில்லனாக நடித்திருக்கின்றனர். அனுஷ்கா, தமன்னா ஹீரோயின். இந்தியில் இப்படம் வெளியானது. தமன்னா ஏற்றிருக்கும் வேடம் குறித்து சிலர் சர்ச்சை எழுப்பி உள்ளனர். தமன்னா தூங்கும்போது நீருக்கு அடியிலிருக்கும் அவரது கையில் பிரபாஸ் ஓவியம் வரைந்துவிட்டு செல்வது பலாத்காரத்துக்கு சமமாக உள்ளது. படத்தின் எதிர்கால பலன் கருதி தமன்னா அக்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நடித்திருக்கிறார் என விமர்சித்தனர். இது இணைய தளங்களில் டிரெண்ட் ஆகி இருக்கிறது. சமீபத்தில் விடுமுறை பயணமாக வெளிநாடு சென்ற ராஜமவுலி இந்தியா திரும்பினார். தமன்னா காட்சி பற்றி எழுந்த விமர்சனத்துக்கு அவர் விளக்கம் அளித்திருக்கிறார். ‘எதையும் எழுத்துவடிவில் சித்தரிக்கும்போது லாஜிக் பார்க்கவேண்டியதில்லை. காட்சியாக படமாக்கும்போது அது இதயத்தை தொடுவதாக இருக்க வேண்டும். தமன்னாவுக்கு பெண்மைக்கான இயற்கை உணர்வை தரவேண்டும் என்பதற்காக ஹீரோ செய்யும் செயல் தவறல்ல’ என்றார். இதேபடத்தில் மதன் கார்க்கி எழுதிய வசனத்துக்கு சமுதாயத்தில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு விளக்கம் அளித்துள்ள கார்க்கி தான் எந்தபிரிவையும் தாக்கி வசனம் எழுதவில்லை’ என குறிப்பிட்டிருக்கிறார்.