இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம்

179
இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் ஐசிசி இந்த அபராதத்தை விதித்துள்ளது.

இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை அணித்தலைவர் தசுன் ஷனக்க குற்றச்சாட்டு தொடர்பான குற்றத்தை ஏற்றுக்கொள்வதால், குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை நீதிபதிகள் மேற்கொள்ள மாட்டார்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது. – ada derana

SHARE