ஆயுர்வேத பாதுகாப்புச் சபையினால் விசேட நிகழ்வுகள் 

122

நூருல் ஹுதா உமர் 

“இயற்கையோடு இணைந்த வாழ்வை நாடுவோம்“ எனும் தொனிப்பொருளிலான  விழிப்புணர்வு உரைகள், புதிய உறுப்பினர்களுக்கு உறுப்புரிமை அடையாள அட்டை சான்றிதழ் வழங்குதல், மார்க்க உரையுடன் இப்தார் ஆகிய நிகழ்வுகள் கல்முனைப் பிராந்திய ஆயுர்வேதப்பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ.நபீல் அவர்களின் ஒருங்கிணைப்பில் சம்மாந்துறை ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம் காலித் தலைமையில் சம்மாந்துறை டிராசத்துல் இஸ்லாமிய்யா அறபுக்கலாசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களும் கௌரவ அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா   அவர்களும் விசேட அதிதிகளாக சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம் சையத் உமர் மௌலானா அவர்களும் உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

SHARE