வீரர்களை உற்சாகப்படுத்த நேரில் வரும் ரிஷப் பண்ட்

167

விறுவிறுப்பு நிறைந்த 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சும், குஜராத் டைட்டன்சும் மல்லுக்கட்டுகின்றன.

டெல்லி அணி தனது தொடக்க ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவிடம் பணிந்தது. கேப்டன் வார்னர் (56 ரன்) தவிர மற்றவர்கள் பேட்டிங்கில் சொதப்பினர்.

எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் டக்-அவுட் ஆகிப் போனார். தற்போது சொந்த ஊரில் நடப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

இந்நிலையில் டெல்லி – குஜராத் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி வீரர்களை உற்சாகப்படுத்த ரிஷப் பண்ட் நேரில் வரவுள்ளார். இதனால் டெல்லி ரசிகர்கள் அவரது வருகையை எதிர்நோக்கி உள்ளனர்.

கடந்த ஆண்டு இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் குஜராத் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பிக்கிறது.

maalaimalar

SHARE