தனுஷ்க குணதிலகவின் பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன

172

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளுர் நீதிமன்றில் அவர் இன்று (06) தனது பிணை நிபந்தனைகளை மாற்றுமாறு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனுஷ்க குணதிலகவிற்கு மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SHARE