போராடி தொடரை வென்ற நியூசிலாந்து – தொடரை இழந்த இலங்கை

142
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ரி20 கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 73 ஓட்டங்களை பெற்றார்.

நியூசிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் Ben Lister 2 விக்கெட்டுக்களையும் Adam Milne மற்றும் Ish Sodhi ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்ப்பில் Tim Seifert 88 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணி சார்ப்பில் பந்துவீச்சில் லஹிரு குமார 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

அதனடிப்படையில் 2 – 1 என்ற ரீதியில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது. – ada derana

SHARE