டிக்கெட் விலையின் அறிவிப்பை கண்டு சீன ரசிகர்கள் கடும் அதிருப்தி

136
சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள ஒர்க்கர்ஸ் மைதானத்தில் வரும் 15ம் திகதி நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடைபெறுகிறது.

இதில் லயோனல் மெஸ்ஸி இடம் பெற்றுள்ள அர்ஜெண்டினா அணியானது ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட உள்ளது.

போட்டி நடைபெறும் மைதானத்தில் சுமார் 68 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம்.

இந்த போட்டிக்கு 60,761 /= முதல் 555,964/= வரையிலான டிக்கெட் விற்பனை இரு கட்டங்களாக வரும் 5 மற்றும் 8ம் திகதிகளில் ஆரம்பிக்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

டிக்கெட் விலையின் அறிவிப்பை கண்டு சீன ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அவர்கள், போட்டி ஏற்பாட்டாளர்களை வசை பாடி உள்ளனர்.

இதற்கிடையில் இணையதளத்தில் டிக்கெட் விற்பனை செய்யும் சீன நிறுவனம் ஒன்று அர்ஜெண்டினா – ஆஸ்திரேலியா போட்டிக்கான விஐபி டிக்கெட்டின் விலை ரூ.2,009,868 /= என அறிவித்துள்ளது.

SHARE