ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் சாதித்த இலங்கை

144
ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் இலங்கை, 4 தங்க பதக்கங்களையும், 2 வௌ்ளி பதக்கங்களையும் ஒரு வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளது.

இந்த போட்டிகளில் பெண்களுக்கான 800 மீட்டா் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 400 மீட்டா் ஓட்டப்போட்டியில் வௌ்ளிப் பதக்கத்தையும் தருஷி குருணாரத்ன வென்றாா்.

இதேவேளை, 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் இலங்கை அணி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

அத்துடன் ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் இலங்கையின் மலித் யாசிரு வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார். – ada derana

SHARE