
உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிம்பாப்வே நோக்கி பயணித்துள்ளது.
அதிகாலை 03.15 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான சேவையின் EK-649 ரக விமானத்தில் துபாய் சென்றுள்ள இலங்கை அணி, அங்கிருந்து மற்றுமொரு விமானத்தில், சிம்பாப்வே செல்லவுள்ளதாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
அங்கு இலங்கை அணி முதலில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய இரு கிரிக்கட் அணிகளுடன் பயிற்சிக்கு முந்தைய இரண்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
பின்னர் ஐக்கிய அரபு இராஜ்ஜியம், ஓமன், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுடன், சிம்பாப்வேயில் உள்ள புலவாயோ மற்றும் ஹராரே கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும் தகுதிச் சுற்று ஆட்டங்களில் இலங்கை அணி பங்கேற்கிறது. – ada derana