ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அணிக்கு எதிரான ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 111 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி களம் இறங்கிய ஸ்கொட்லாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றது.
ஸ்கொட்லாந்து அணி சார்பாக அதிக ஓட்டங்களாக 121 ஓட்டங்களை அணியின் தலைவா் Richie Berrington பெற்றார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அணி சார்பாக Junaid Siddique, 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னா் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அணி 35.3 ஓவா்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அணி சார்பாக Basil Hameed அதிக ஓட்டங்களாக 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தாா்.