உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இன்று இலங்கை – நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா – கருரத்ணே ஜோடி களமிறங்கினர். முதல் ஓவரின் முதல் பந்திலேயே நிசங்கா கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த குசல் மெண்டீஸ் 10, சமரவிக்ரமா 1, அசலங்கா 2, தசுன் சனகா 5 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் தனஞ்செயா – ஹசரங்கா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹசரங்கா 20 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த தீக்ஷனா அவருடன் நல்ல பார்னர்ஷிப்பை அமைத்தார். ஒன் மேன் ஆர்மியாக விளையாடிய தனஞ்செயா 93 ரன்னிலும் தீக்ஷனா 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை அணி 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக், பாஸ் டி லீடே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
maalaimalar