பென் ஸ்டோக்ஸை விமர்சித்த அவுஸ்திரேலிய பத்திரிக்கை

124

இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்திலும் 2 ஆவது போட்டியில் 43 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வென்று 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டெஸ்ட் போட்டி ஜூலை 6 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

2 ஆவது டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவ் வெளியேறியதை கருத்தில் கொண்டு நியாயத்துடன் நடந்து கொள்ள வேண்டிய அவுஸ்திரேலியா நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் விமர்சிக்கின்றனர்.

போட்டி முடிந்த பின் தங்களுடைய பெவிலியின் நோக்கி சென்று கொண்டிருந்த அவுஸ்திரேலிய வீரர்களிடம் எம்சிசி அமைப்பின் சில உறுப்பினர்கள் தள்ளுமுள்ளு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பேட்டியளித்த பென் ஸ்டோக்ஸ், கீழ்த் தரமாக ஆட்டமிழக்க செய்து வெல்ல வேண்டுமா? என்று விமர்சித்தார். மேலும் தாங்களாக இருந்தால் அந்த முடிவை திரும்ப பெற்று துடுப்பாட்ட வீரரை மீண்டும் விளையாட அழைத்திருப்போம் என்று தெரிவித்தார்.

ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத அவுஸ்திரேலிய அணி தலைவர் பேட் கம்மின்ஸ், சரி விதிமுறைப் படியே நடந்து கொண்டோம். என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்து சென்றார்.

இந்நிலையில் தாங்கள் எழுதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு நடுவர் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் அழுது புலம்பி விமர்சித்து தீர்ப்பதாக இங்கிலாந்தை பிரபல மேற்கு அவுஸ்திரேலியாவின் பத்திரிக்கை வெளிப்படையாக விமர்சித்துள்ளது.

குறிப்பாக அணி தலைவர் பென் ஸ்டோக்ஸ் முகத்தை ஒரு பச்சிளம் குழந்தையுடன் சேர்த்து எடிட் செய்து அவருடைய வாயில் பால் போத்தலை வைத்திருப்பது போல் அந்த பத்திரிக்கை சித்தரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக புதிய பந்தை ஒழுங்காக பிடித்து விளையாட தெரியாமல் ஆஷஸ் கிண்ணத்தை தவற விடாதீர்கள் என்ற வகையில் அந்த பத்திரிக்கையை நிறுவனம் விமர்சித்துள்ளது.

முன்னதாக 1890 கால கட்டங்களில் இங்கிலாந்து பத்திரிக்கை இவ்வாறு தங்களது அணியை பகிரங்கமாக விமர்சித்ததே ஆஷஸ் உருவாவதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது என குறிப்பிடத்தக்கது.

SHARE