கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கம்

125

2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 400×4 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில்  இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றுள்ளது.

போட்டித் துரத்தை இலங்கை அணி 3:15.41 நிமிடங்களில் நிறைவு செய்து இரண்டாம் இடத்தை பெற்றது.  போட்டியில் இந்தியா முதலாம் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தையும், ஜப்பான் மூன்றாம் இடத்தை பெற்றுக் வெங்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டன.

இந்த போட்டித் தொடர் தாய்லாந்தின் பேங்கொக்கில் நடைபெற்று வருகிறது. – ada derana

SHARE