வவுனியா மண்ணில் முதல் முறையாக பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்குத் தெரிவாகியிருந்த மாணவி கோசியா திருமேனன் அவர்கள், இந்தியாவின், டெல்லியில் நடைபெற்ற 40 கிலோ எடை பிரிவில் பங்கேற்று, மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் தாய்நாட்டை வந்தடைந்த மாணவி, இன்றைய தினம் வவுனியாவுக்கு வருகை தந்த நிலையில், பத்தினியார் மகிழங்குளம் RDS தலைவரின் தலைமையில், பத்தினியார் மகிழங்குள கிராம சமூர்த்தி அதிகாரி மற்றும் கிராம மக்கள் அனைவரும் இணைந்து, பத்தினியார் மகிழங்குளம், சமயபுர மாணவியின் முயற்சியையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, அவரைப் பாராட்டும் விதமாக, அனைவரும் ஒன்று சேர்ந்து மாணவியின் பயிற்சி நிலையத்தில், பயிற்றுவிப்பாளரையும் மாணவியையும் கௌரவிக்கும் முகமாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவருக்கு தொடர்ந்து பயிற்சிகளை வழங்கிவரும் பயிற்சியாளர் ரஜீ (Rajee Gym Center) அவருக்கும், மாணவிக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோருக்கும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.