இலங்கை அணியின் துணைத் தலைவர் தனஞ்சய டி சில்வா தனது 10வது டெஸ்ட் சதத்தை இன்று (17) பதிவு செய்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்சமயம் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் தனஞ்சய டி சில்வா 175 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் சதமடித்தார்.
இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 6 விக்கட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுள்ளது.