தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 400X4 ஆண்களுக்கான தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர்கள் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
இலங்கை வீரர்கள் 3:01.56 நிமிடங்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்தனர்.
இதேவேளை, 400×4 பெண்களுக்கான தொடர் ஓட்டப் போட்டியில் வௌ்ளிப் பதக்கத்தை வென்று இலங்கை வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.
3:33.27 நிமிடங்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து இரண்டாம் இடத்தை பெற்ற இலங்கை வீராங்கனைகள் வௌ்ளிப் பதக்கத்தை வென்றனர்.