தடை செய்யப்பட்ட போதைபொருளை விற்பனை செய்ய முயற்சித்த நபரை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.

331

புகையிலை தூள் அடைக்கப்பட்ட 525 டின்களை பொகவந்தலாவ செல்வகந்தை பகுதியில் உள்ள கடை ஒன்றில் மறைத்து வைத்து விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை  06.08.2015 அன்று பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனா்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி விரைந்து சென்ற பொகவந்தலாவ பொலிஸார் குறித்த சந்தேக நபரை விசாரணைக்குட்படுத்தியபோது புகையிலை தூள் அடைக்கப்பட்ட 525 டின்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

இது மாணவா்களுக்கு அதிகளவாக விற்பனை செய்யப்படுகின்றது என ஆரம்பகட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இது தடை செய்யப்பட்ட போதைபொருள் என்பது குறிப்பிடதக்கது.

கைது செய்த சந்தேக நபரை 07.08.2015 அன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனா்.

unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed

 

SHARE