21 ஓட்டங்களால் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ்

119

நேற்று (30) ஆரம்பமான லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், முதல் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கிடையிலான நடைபெற்ற போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றது

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழப்பிற்கு 173 ஓட்டங்களைப் பெற்றது.

ஜப்னா கிங்ஸ் அணி சர்பாக Towhid Hridoy 54 ஓட்டங்களையும், Dunith Wellalage ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்நிலையில் பதிலுக்கு களம் இறங்கிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 19 ஓவர் 4 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தலைவர் நிரோஷன் டிக்வெல்ல 34 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பெற்றார்.

SHARE