சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம்

124

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிக்கையொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் கடந்த 11ஆம் திகதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அது குறித்த சபை ஒத்திவைப்பு வேளை  பிரேரணையின் பிரகாரம், எதிர்வரும் 24ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கூடும் என பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு மேலும் தீர்மானித்துள்ளது.

இதன்படி வரும் வெள்ளிக்கிழமை 25ம் திகதி தவிர, ஏனைய தினங்களில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையான காலப்பகுதி வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

SHARE