வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய தேர்தல் தொகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள 9537 வாக்காளர்களுக்கு புத்தளம் மாவட்டத்தில் 17 வாக்குச் சாவடிகளும், அனுராதபுர மாவட்டத்தில் 2 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

337

unnamed (7)

மன்னார் தேர்தல் தொகுதியில் 8781 வாக்காளர்களும், முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 209 வாக்காளர்களும், வவுனியா தேர்தல் தொகுதியில் 547 வாக்காளர்களும் மேற்படி இரு மாவட்டங்களிலும் வாழ்ந்து வருவதாகவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் வசதிகளை செய்து கொடுப்பதற்காக வேண்டி இவ்வாறு 19 வாக்குச் சாவடிகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மட் குறிப்பிட்டுள்ளார்.

SHARE