பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றதில் இருந்து எனது சம்பளப்பணத்தை வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காகவே செலவிடுவேன் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் கே. கே. மஸ்தான் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வர்று தெரிவித்தார்.
தொடாந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாம் இதுவரை காலமும் தமிழ் முஸ்லீம் சிங்களவர்கள் என்று எச் சந்தர்ப்பத்திலும் பேதம் பார்த்தவர்கள் கிடையாது. எம்மிடம் உதவி என்று வந்தவர்களுக்கு மனிதர்கள் என்ற ரீதியிலேயே எமது சொந்த பணத்தில் உதவிகளை வழங்கியுள்ளோம். அதன் காரணமாகவே நான் தேர்தலில் போட்டியிடுவேண்டும் என்றும் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்றும் மூவின மக்களும் ஆசைப்படுகின்றார்கள்.
இந் நிலையில் நான் எனது பாராளுமன்ற சம்பளப்பணத்தினையும் இன்று கற்பதற்கு கூட நிதியில்லாது வாழும் மூவின மாணவர்களுக்கு செலவு செய்வேன் என்பதனை தெரிவித்துக்கொள்ளகின்றேன்.
குறிப்பாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவில் மூவினங்களும் ஒற்றுமையாக ஒரு இனத்தவரின் பெருநாள் என்றால் அனைவரும் கூடி மகிழ்ந்த காலம் இருந்தது. ஆனால் கடந்த சில காலங்களாக அரசியலவாதிகள் சிலர் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக இனங்களுக்கிடையில் பிரிவை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இந் நிலைய மாறவேண்டும்.
இதேவேளை வட மாகாணசபையை தமிழ் தேசிய்ககூட்டமைப்பு கைப்பற்றியுள்ள நிலையில் இங்குள்ள பெரும்பான்மையான மக்களும் அவாகளுடன் இருக்கின்றார்கள். எனவே நாம் கட்டாயமாக தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து வட மாகாணத்தில் பணியாற்றுவோம் செயலாற்றுவோம். அதனூடாகவே சரியான ஒரு அபிவிருத்தியை செய்ய முடியும். முன்னைய அரசியல்வாதிகள் போல் தமது அமைச்சு பதவிகளுக்காக சிலரை புறந்தள்ள நடக்கும் செயற்பாட்டை நாம் மேற்கொண்டு எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை கைவிட தயாரில்லை.
அபி;விருத்திகள் சில நடந்துள்ளது. சில மிக மோசமாக உள்ளது. அவற்றைப்பற்றி சொல்லப்போனால் சிலரைப்பற்றி விமர்சிக்கவேண்டி ஏற்படும். அவர்களின் செயற்றிறனின்மையை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். அது மாத்திரமின்றி இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வளர்க்க காரணமாக இருந்த விடயங்களை எடுத்துக்கூற வேண்டியிருக்கும்.
எனினும் நாம் யாரையும் விமர்சித்து அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை. மக்கள் எம்முடன் உள்ளார்கள். இந் நிலையில் ஒருவரை விமர்சித்தும் அவரின கடந்த கால செயற்பாட்டை எடை போட்டும் அரசியல் செய்ய நாங்கள் தயாராக இல்லை.
நாங்கள் எமது மக்களுக்கான பணியை செவ்வனே செய்வோம். அது இன மத பேதமற்றதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அது எனது மக்களுக்கு தெரியும் அந்த நம்பிக்கையை வெற்றியின் பின்னரும் காப்பேன் என தெரிவித்தார்.