மக்களுக்கு சேவை செய்வதே உண்மையான அரசியல் வேட்பாளர் இ. சாள்ஸ்

304

வவுனியா
மக்களுக்கு சேவை செய்வதே உண்மையான அரசியல் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் இ. சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
வவுனுpயா கோவில்குளம் பகுதியில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எமது தாயகமண்ணில் பெறப்படுகின்ற ஒவ்வொரு பாராளுமன்ற ஆசனங்களும் எமது மக்களின் உரிமைக்குரலின் அடையாளமாய் விளங்கிடும். அதன்படி இம்முறை எம் மக்கள் தமிழின அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் 2004ம் ஆண்டு பெறப்பட்ட 22 ஆசனங்கள் போன்று இம் முறையும் 20 ஆசனம் பெற்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று அதன் மூலம் எமது இழந்திட்ட இறைமைகளை மீளப் பெறும் நிலை உருவாக வேண்டும். அதேவேளை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொரு மக்களுடனும் சாதாரண மனித பண்புடன் அணுகுதல் அவசியம். அதுவே அவர்களின் உண்மையான உயரிய கடமைகளாகும்.
அது மட்டுமன்றி தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க முன்னிற்கவேண்டும். எனது எண்ணமும் சிந்தனையும் இதுவாகவே அமைகின்றது. அதனாலேயே நாம் அரசியலில் இணையும் நிலை உருவானது. அதன்படி மக்களுக்கு சேவை செய்யும் உண்மையான அரசியலில் நான் முன்னுதாரணமாக திகழ்வேன். அதேவேளை இந்த அரசியலை 2 வகையாக வகைப்படுத்தலாம்.
· மக்களுக்கு சேவை செய்யும் அரசியலுக்கு போகின்றவர்கள்,

· தமது அரசியல் வாழ்விற்காய் மக்களை தேடுபவர்கள்.

எமது மக்களுக்கு சேவை செய்யும் உயரிய அரசியலையே நான் கொண்டுள்ளதோடு மக்களுடைய துன்பத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு ஏற்படுகின்றவன் கொடுமைகளுக்கு எதிராக முன்னின்று உழைப்பதோடுகடந்த ஜனாதிபதி ஆட்சி மாற்றத்திற்கும் முன்னின்று உழைத்து, மக்களின் அமோக ஆதரவோடு ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய தோடு இம் முறையும் இன்றைய அரசமைப்பதற்கு பாரிய நெருக்கடி ஏற்படுத்துவதோடு தமிழ் மக்களுடைய ஆதரவுடன் அரசு அமையும் நிலை உருவாகும். இவ் நிலையில் சிங்கள மக்கள் எவ்வாறு தங்களுடைய எண்ணங்களுடன் சுதந்திரமாக வாழ்கின்றார்களோ அதுபோன்று தமிழ் மக்களும் தமது இன அடையாளத்தை உறுதிப்படுத்தும் சுய நிர்ணய உரிமையும் அதிகாரபகிர்வும் சட்ட ரீதியாக தேவையான அரசியல் அமைப்பு மாற்றத்தின் மூலம் அடைவதற்கும் எமது அரசியல் வாழ்வு அமையும் என்று உறுதி கொண்டுள்ளேன் என தெரிவித்தார்.

SHARE