பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ள அட்லீ முதன் முதலில் இயக்கியுள்ள படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முதன்மை ரோலில் நடித்துள்ளனர்.
பிரமாண்டமாக உருவாகியுள்ள ஜவான் படம் இன்று உலகளவில் திரையரங்கில் வெளிவந்துள்ளது. இந்நிலையில், அதிகாலை காட்சி பார்த்த ரசிகர்கள் ஜவான் படத்தின் விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளனர்.
அதன்படி, ஜவான் படத்தின் முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதி முழுக்க Goosebumps தான். வேற லெவல் திரைக்கதை. அட்லீ மிரட்டிவிட்டார். ஷாருக்கான் நடிப்பு பட்டையை கிளப்புகிறது. ப்ளாக் பஸ்டர் ஜவான் என கூறி 4/5 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.
நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரின் நடிப்பும் அருமை. அனிருத் பின்னணி இசை வெறித்தனமாக இருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் அனைவருடைய ஒரே கருத்து படம் ப்ளாக் பஸ்டர் என்பது தான். இதன்மூலம் அட்லீ பாலிவுட் திரையுலகிலும் வெற்றி இயக்குனராக மாறியுள்ளார்.