சினிமாவில் க்ளிக் ஆக ஏதாவது ஒரு புராஜக்ட் கலைஞர்களுக்கு கை கொடுக்கும். அப்படி சினிமாவில் ஜொலிக்க மைனா நந்தினிக்கு ஒரு ஆரம்பமாக இருந்த சீரியல் தான் சரவணன் மீனாட்சி.
அந்த தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்றார்.
அந்த தொடர் மூலம் அவருக்கு கிடைத்த பெயரை பயன்படுத்தி அப்படியே படிப்படியாக உயர்ந்து வந்தார்.
இப்போது சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் பெயர் சொல்லும் அளவிற்கு படங்கள் நடித்து வருகிறார்.
யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட மைனா நந்தினிக்கு ஒரு மகன் உள்ளார். அண்மையில் தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார் மைனா நந்தினி.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அவரின் மகனுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.