தெலுங்கு திரையுலகில் பிரபலமான நட்சத்திரம் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமின்றி பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவரும் ஆவார்.
ஜனசேனா எனும் கட்சியை வழிநடத்தி வருகிறார். சமீபத்தில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் சந்திரபாபு நாயுடு. இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜனசேனா கட்சி தலைவர் எனும் முறையில் கைது செய்யபட்ட சந்திரபாபு நாயுடுவை சந்திக்கச் சென்றுள்ளார்.
சாலையில் படுத்த பவன் கல்யாண்
ஆனால், சந்திக்க சென்ற பவன் கல்யானை தடுத்து நிறுத்தியதால், அவர் திடீரென சாலையில் படுத்து தர்ணா செய்ய துவங்கிவிட்டார்.
இந்த விஷயம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பவன் கல்யாண் சாலையில் படுத்து தர்ணா செய்த விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது.