சன் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த பிரபலங்கள் அனைவருமே ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்கள். அப்படி சந்திரலேகா தொடரில் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்வேதா.
அஜித்தின் ஆழ்வார் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தவர் ஜெயம் ரவி நடித்த பூலோகம் படத்தில் நடித்தார்.
2009ம் ஆண்டு மகள் என்ற சீரியலின் மூலமாக அறிமுகமானவர் அதன்பிறகு சந்திரலேகா, நிலா போன்ற சீரியல்களில் நடித்தார்.
கடந்த வருடம் ஸ்வேதாவுக்கு திருமணம் நடந்தது, கர்ப்பமாக இருந்த ஸ்வேதாவிற்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாம். ஒரு குழந்தை ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.
இந்த தகவலை ஸ்வேதாவே இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.