கனடா மாகாணம் ஒன்றில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

113

 

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

5.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

ஒரே இடத்தில் 5.5 மற்றும் 4.2 ரிச்டர் என்ற அளவுகளில் இரண்டு தடவைகள் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த 14ம் திகதி முதல் இதுவரையில் வான்கூவார் பகுதியில் 30 சிறு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.இன்றைய தினம் பதிவான நில நடுக்கத்தினால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

SHARE