அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம் பெற்று தராவிட்டால் அன்று தமிழரசுக்கட்சியிலே இருந்த அஸ்ரப் பெற்றுத்தருவேன் என கூறினார் – ரிசாட் பதியூதீன்

384

 

அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம்  பெற்று தராவிட்டால் அன்று

தமிழரசுக்கட்சியிலே இருந்த அஸ்ரப் பெற்றுத்தருவேன் என கூறினார் –

ரிசாட் பதியூதீன்

unnamed (1) unnamed (2) unnamed

வவுனியா அண்ணா நகரில் இன்று 11-08-2015 நடைபெற்ற ஜக்கிய தேசிய

கட்சியின் தேர்தல் பிரச்சார நிகழ்வில் கைத்தொழில் வணிக அமைச்சர்

ரிசாட்பதியுதீன் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு

தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஒரு தேசிய உணர்வோடு தமிழ் சமூகம் பயணித்தது என தெரிவித்த

ரிசாட் பதியூதீன் ஆகக்குறைந்தது சமஸ்டியை தலைவர் பெற்றுத்தருவார் என்ற

நம்பிக்கையோடு தமிழ் சமூகம் பயணித்தது. என தெரிவித்தார். அண்ணன்

அமிர்தலிங்கம் தமிழீழம் பெற்று தராவிட்டால் அன்று தமிழரசுக்கட்சியிலே

இருந்த அஸ்ரப் பெற்றுத்தருவேன் என கூறியதாக குறிப்பிட்டார்.; 1983

பின்னரான காலப்பகுதியில் தமிழ் இளைஞ்ஞர்கள் மாறி மாறி கொலைகளில்

ஈடுபட்டதாக சுட்டிக்காட்டினார். முஸ்லிம் இளைஞ்ஞர்களும் இயக்கங்களில் இணைந்து

செயற்பட தொடங்கியமையால் அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரசை உருவாக்கியதாக

தெரிவித்த அவர் நோக்கம் நிறைவேறாமலே இறுதி யுத்தம் முடிவடைந்ததாக

குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட ரிசாட் பதியுதீன் இறுதி யுத்தம் முடிவடைந்து மக்கள்

வவுனியா நோக்கி வந்த போது கூட்டமைப்பை சேர்ந்த எவரும் வந்து பார்க்கவில்லை என

குற்றஞ்சாட்டினார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வவுனியா வந்த மக்களுக்கு கூழ்

காச்சி வழங்கியதாக குறிப்பிட்ட அமைச்சர் தமிழ் மக்களின் உயிரை காப்பாற்ற

பாடுபட்டதாக தெரிவித்தார்.

இறுதிகட்ட யுத்தம் நடைபெற்றபோது யுத்தத்தை நிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு

எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென குற்றஞ்சாட்டினார். அகதி வாழ்க்கை என்பது

கொடுமையானது என சுட்டிக்காட்டிய அமைச்சர் எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு

தலைவராக வளர்ந்து விடுவானோ என்ற பயத்தினாலும்; பொறாமையின் காரணமாகவும்

சிலர் தன்னை தூற்றுவதாக குறிப்பிட்டார். தன்னை பழி வாங்குவதாக நினைத்து சிலர்

அப்பாவி மக்களை பழி வாங்குவதாக குற்றஞ்சாட்டினார். தமிழ் மக்களுக்கே

SHARE