பிரமாண்டமாக தளபதி 68 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்காக தான் சமீபத்தில் விஜய், வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளிநாடு சென்று வந்தனர்.
அங்கிருந்து எடுத்த புகைப்படங்கள் கூட வெங்கட் பிரபு வெளியிட்டு இருந்தார். இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும், அவருக்கு ஜோடிகளாக சினேகா மற்றும் பிரியங்கா மோகன் நடிக்கிறார்கள் என்றும் தகவல் வெளிவந்தது.
அதன்பின் பிரபு தேவா, பிரஷாந்த், வைபவ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர் தான் வில்லனா
இந்நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு முன்னணி நட்சத்திரம் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகர் அரவிந்த் சாமி தான். ஆனால், அவர் இப்படத்தில் வில்லா அல்லது வேறு ஏதேனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என தெரியவில்லை.
லியோ படத்தில் தான் சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மிஸ்கின் என திரை பட்டாளமே நடிக்கிறார்கள் என நினைத்தால் தற்போது தளபதி 68 படத்தில் பாதி கோலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்று பார்த்தால். தளபதி 68 படத்திற்குமுன் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த கஸ்டடி படத்திலும் அரவிந்த் சாமி முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.