7ஜி ரெயின்போ காலனி படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இவர் தானா

103

 

19 ஆண்டுகள் ஆகியபின்பும் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி.

செல்வராகவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படம் வெளிவந்து 19 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதன் தெலுங்கு வெர்ஷன் சமீபத்தில் ரீ ரிலீஸ் ஆனது. இதன் முதல் நாள் வசூல் மட்டுமே ரூ. 1.04 கோடி வசூல் செய்துள்ளது.

அட இவர்களா
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது ரவி கிருஷ்ணா கிடையாதாம். சூர்யா மற்றும் மாதவன் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தார்களாம்.

ஆனால், அவர்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக பின் தான் ரவி கிருஷ்ணா ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை அவரே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

SHARE